`வரி செலுத்துகிறேன்; மின்வெட்டு ஏன் இருக்கிறது'- அரசுக்கு தோனி மனைவி `நறுக்' கேள்வி

`வரி செலுத்துகிறேன்; மின்வெட்டு ஏன் இருக்கிறது'- அரசுக்கு தோனி மனைவி `நறுக்' கேள்வி

ஜார்க்கண்டில் மின்தடை அதிகரித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு `நறுக்'கென்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய பல மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கி மக்களுக்கு மின்சேவை வழங்கி வருகிறது. ஜார்க்கண்டிலும் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை அதிகரித்துள்ளது.

மக்கள் ஒரு பக்கம் வேதனையை சந்தித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங்கும் பாதிக்கப்பட்டுள்ளார். மின் தடை தொடர்பாக அம்மாநில அரசுக்கு `நறுக்'கென்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜார்க்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்" என்று காட்டாக கூறியுள்ளார். தோனி மனைவியின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in