மழையால் நனைந்துபோன நிலக்கரி: தூத்துக்குடியில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மழையால் நனைந்துபோன நிலக்கரி: தூத்துக்குடியில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் தொடர் மழையின் காரணமாக நிலக்கரி நனைந்து போனது. இதன் காரணமாகத் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் இயங்கிவருகிறது. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகள் இயங்கி வருகிறது. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலையத்தின் மூலப்பொருள் நிலக்கரிகள் ஆகும். மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழையில் நனைந்துவிட்டன.

இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே நிலக்கரி நிரப்பப்பட்ட முதல் இரு அலகுகள் மட்டுமே இதனால் இயக்குகின்றது. மூன்று, நான்கு, ஐந்தாவது அலகுகள் இன்று மதியத்தில் இருந்து நிறுத்தப்பட்டன. நிலக்கரியில் ஈரப்பதம் காய்ந்த பின்னர் மீண்டும் அந்த மூன்று அலகுகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in