'துண்டிக்கப்பட்ட மின்சாரம் எப்போது வரும்?': அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

'துண்டிக்கப்பட்ட மின்சாரம் எப்போது வரும்?': அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

'மேன்டூஸ்' புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மதியத்திற்குள் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 5-ம் தேதி  உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுக்  கடந்த 7-ம்  தேதி  இரவு புயலாக வலுப்பெற்றது. 'மேன்டூஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை 2.30க்கு கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காரணமாக சென்னையில் சுமார் 400 இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்துள்ளன.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்கம்பங்களைச் சரிசெய்யும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மட்டும் சுமார் 1,100 மின்வாரிய பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மதியத்திற்குள் நூறு சதவீதம் மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in