`1.5 கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பே, தியாக தங்கையே': ஓபிஎஸ்- சசிகலா புகைப்படத்துடன் கூடிய போஸ்டரால் வெடித்த சர்ச்சை!

சசிகலா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்
சசிகலா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தலைமை ஏற்க வரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டு வந்தது. தற்போது சசிகலாவின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் உச்சத்தை அடைந்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் மாறி மாறி அவரவர் தலைமையில் கூட்டம் நடத்தி வருகின்றனர். ஒருபுறம் இப்படி இருக்க, மறுபுறம் தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பையும், ஆதரவையும் காட்டி வருகின்றனர்.

ஒற்றைத் தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க வேண்டும் என்று மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஓபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்க வாருங்கள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு நடுவே சசிகலாவின் புகைப்படத்துடன், "தாய் வழி வந்த தங்க தாரகையின் 1.5 கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பே தியாக தங்கையே!" என்ற வாசகமும், "அம்மா அவர்களால் அடையாளம் காட்டிய தர்மத் தலைவரே ஒன்று கூட்டி ஒற்றை தலைமையேற்க வாருங்கள் என்று அனைத்து கடைக்கோடி தொண்டனின் விருப்பம்" என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஒற்றைத் தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டி ஓட்டி வந்தனர். தற்போது, சசிகலா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. ஒற்றைத் தலைமை கோஷத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகரித்ததால் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து தன்னை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும்? என்று தொண்டர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in