பிரபல ஓட்டல் வெஜ் பிரியாணியில் இரும்புத்துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி

வெஜ் பிரியாணியில் கிடந்த இரும்புத்துண்டு
வெஜ் பிரியாணியில் கிடந்த இரும்புத்துண்டுபிரபல ஓட்டல் வெஜ் பிரியாணியில் இரும்புத்துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி

சென்னையில் பிரபல ஓட்டலில் வெஜ் பிரியாணியில் இரும்புத் துண்டு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பிரபல சைவ ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் காசிமாயன் என்பவர் இதில் சாப்பிடச் சென்றுள்ளார். ஸ்பெஷல் வெஜ் பிரியாணியை காசிமாயன் ஆர்டர் செய்தார். ஓட்டல் ஊழியரும் வெஜ் பிரியாணி கொண்டு வந்து கொடுத்தார். அதை காசிமாயன் சாப்பிடும் போது அதில் ஓரு இரும்புத் துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வெஜ் பிரியாணியில் கிடந்த இரும்புத்துண்டு
வெஜ் பிரியாணியில் கிடந்த இரும்புத்துண்டு பிரபல ஓட்டல் வெஜ் பிரியாணியில் இரும்புத்துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி

இதுகுறித்து ஓட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளார். உடனே ஓட்டல் ஊழியர், ஸாரி சார், குழம்பு கரண்டி உடைந்து விழுந்திருக்கலாம் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு காசிமாயன் அதிர்ச்சியடைந்தார். அவர் சாப்பிட்டதற்கு பில்கேட்டுள்ளார். ஆனால், பில்லும் கொடுக்காமல், பணத்தையும் வாங்காமல் காசிமாயனை ஊழியர்கள் காக்கவைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான காசிமாயன், வீடியோ ஆதாரங்களுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் வாயிலாக புகார் அளித்தார். இதன் பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த உணவகத்திற்கு நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல ஓட்டலில் வெஜ் பிரியாணியில் இரும்புத் துண்டு இருந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in