சாத்தான்குளத்தில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டப்போது பூரான் இருப்பதை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் வாலிபர் ஒருவர் நேற்று சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது கருப்பு நிற பூரான் ஒன்று கடந்திருக்கிறது. இதைப்பார்த்து அந்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அப்போது இந்த உணவகத்தில் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று உணவு பிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு ஓட்டங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வரும் புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். தற்போது மேலூர் சம்பவம் சாத்தான்குளத்தில் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.