பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்கிறீர்களா?- முன்பதிவு விவரங்களை அறிவித்தது ரயில்வே!

பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்கிறீர்களா?- முன்பதிவு விவரங்களை அறிவித்தது ரயில்வே!

பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு நாளை மறுநாள் தொடங்க உள்ளது. ஜனவரி 10-ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு ரயில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் பண்டிகை தினங்களின் போது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி போகிப் பண்டிகை தொடங்கி 17-ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இதற்காகச் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்களில் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இந்நிலையில் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ள நிலையில் காத்திருப்புப் பட்டியலில் அதிகமாக இருக்கும் வழித்தடங்களைத் தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்கக் கூடுதல் பெட்டிகள் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொங்கல் விடுமுறை பயணத்தை திட்டமிடுபவர்கள் முன்பதிவு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in