பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு அறிவித்த பரிசு: 2.19 கோடி பேருக்கு ரேஷன் கடையில் தலா 1000 ரூபாய்

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு அறிவித்த பரிசு:  2.19 கோடி பேருக்கு ரேஷன் கடையில் தலா 1000 ரூபாய்

இந்த பொங்கல் பண்டிகைக்கு 2.19 கோடி பேருக்கு தலா 1000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு என 21பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்களும் தரமில்லையென புகார் வந்தது. அத்துடன் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.

2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பரிசுத்தொகுப்பில் பணம் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். ரேஷன் கடைகள் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். இதன் மூலம் 2356.67 கோடி செலவாகும் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் ஜன.2-ம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in