பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜன.15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போகிப்பண்டிகை, மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை தினங்கள் வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14-ம் தேதி ஜன.17-ம் தேதி வரை நான்கு நாட்கள் அரசு விடுமுறையாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக ஜன.12-ம் தேதி வரை முதல் ஜன.14-ம் தேதி வரை 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in