மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: பொங்கலுக்கு 1,790 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: பொங்கலுக்கு 1,790 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்கள் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் மதுரை சார்பில் இருந்து 1,790 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

இதன்படி, ஜன.12, 13, 14-ல் சென்னையில் இருந்து 280 பஸ்கள், திருச்சி 135, திருப்பூர் 80, கோவை 120, திருநெல்வேலி 35. நாகர்கோவில் 35, திருச்செந்தூர் 30 என 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. விடுமுறைக்கு பின் திரும்பிச் செல்ல ஜன.16, 17, 18-ல் சென்னைக்கு 275 திருச்சி 38, திருப்பூர் 77, கோவை121, திருநெல்வேலி 35. நாகர்கோவில் 35, திருச்செந்தூர் 30, இதர நகரங்களுக்கு 189 என 625 சிறப்பு பஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜன.12 முதல் 18 வரை 7 நாட்களில் ஜன.15 (பொங்கல் பண்டிகை) தவிர 6 நாட்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் பயணிக்க வரும் மக்களுக்கு கனிவாக சேவை செய்ய போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in