பொங்கல் பண்டிகையன்று போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 536 வாகனங்கள் பறிமுதல்

பொங்கல் பண்டிகையன்று போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில்  536 வாகனங்கள் பறிமுதல்

பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 536 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டுவதற்கு முன்பே சென்னை பெருநகர காவல் ஆணையரகம் குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவது, பைக் ரேஸ் போன்ற விதிமுறைகளை மீறக்கூடாது. அப்படி மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 376 வாகனங்களும், இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக 359 வாகனங்கள் என சென்னையில் மட்டும் ஒரே நாளில் 536 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். வாகனத்தின் உரிமையாளர்கள் விதி மீறல்கள் தொடர்பாக உரிய விளக்கம் அளித்தும் அல்லது உரிய அபராத தொகையினை செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in