கேரள கல்லூரிக்குள் அரசியல் மோதல்: காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் யுத்தத்தில் மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி

கேரள கல்லூரிக்குள் அரசியல் மோதல்: காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் யுத்தத்தில் மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி

கேரள மாநிலத்தில் கல்லூரியில் இந்திய ஐனநாயக வாலிபர் சங்கம்- காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த எஸ்.எப்.ஐ அமைப்பின் பெண் நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு மேம்பாடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் அண்மையில் மாணவர் சங்கத் தேர்தல் நடந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தின் உறுப்பினருமான அபினவ் ஹாக்கி கம்புகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பெரம்பரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபினவ் தன் வீட்டு அருகில் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுபேர் கும்பல் அவரைக் கொடூரமாகத் தாக்கியது. இதில் அபினவ் பலத்த காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் போலீஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை தாக்கியவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தார்.

இதேகல்லூரியில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் வயநாடு மாவட்ட இணை செயலாளர் அபர்ணா கெளரி தாக்கப்பட்டார். அபர்ணா கெளரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்தத் தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மாணவர்கள் அல்ல. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் தேர்தல் நடந்தபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மேப்பாடி காவல் நிலைய தலைமை காவலர் விபினும் தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஆலன் ஆண்டனி(20) என்னும் கல்லூரி மாணவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் பேரவைத் தேர்தலில் கேரளத்தில் நடந்துவரும் தொடர் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in