சக ஊழியரின் மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிட்ட போலீஸ்காரர்: விசாரணையில் அதிர்ச்சி

சக ஊழியரின் மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிட்ட போலீஸ்காரர்: விசாரணையில் அதிர்ச்சி

மும்பையில் சக ஊழியரின் மனைவியின் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் பதிவிட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த போலீஸ்காரர் பராப். இவர் சக போலீஸ்காரரின் மனைவியை ஆபாசமாக வீடியோவை எடுத்து அதை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்குமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் புகார் அளிக்க மறுத்து விட்டார். இதனால், அந்த பெண்ணின் கணவர், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் வீடியோவில் இருந்த பெண்ணுக்கும், வீடியோ எடுத்த போலீஸ்காரருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து பராப் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சக ஊழியரின் மனைவியை ஆபாச வீடியோ எடுத்து வெளியிட்ட குற்றத்திற்காக போலீஸ்காரர் பராப், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பை போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in