திருமண ஆசைகாட்டி போலீஸ்காரர் 50 முறை பாலியல் பலாத்காரம் செய்தார்: இளம்பெண் பரபரப்பு புகார்

திருமண ஆசைகாட்டி போலீஸ்காரர் 50 முறை பாலியல் பலாத்காரம் செய்தார்: இளம்பெண் பரபரப்பு புகார்

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி 50 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங். போலீஸ்காரரான இவர் மீது காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். அவரது புகாரில், பிரயாக்ராஜ் பகுதியில் தான் வசித்த போது போலீஸ்காரரான சுனில்குமார் சிங்குடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் நெருங்கிப் பழகியதாக கூறியுள்ளார். அப்போது திருமண ஆசைகாட்டி அவர் தன்னை 50 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, சுனில்குமார் சிங் மறுத்ததுடன் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர் சுனில்குமார் சிங் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை போலீஸ்காரரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in