சீருடையில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போலீஸ்காரர்: வைரலாகும் வீடியோவால் பதறும் காவல்துறை

சீருடையில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போலீஸ்காரர்: வைரலாகும் வீடியோவால் பதறும் காவல்துறை

காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர், பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருவது உத்தரப்பிரதேச காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரில் பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையம் உள்ளது. இங்கு தீப்சிங் என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சீருடையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமான முறையில் இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. சுமார் 9 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தலைமைக்காவலர் தீப்சிங்கிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடியும் வரை அவரை பணி இடைநீக்கம் செய்தனர். அத்துடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரிபாதி கூறுகையில், "தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. மறைமுக கேமிரா மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணே இந்த வீடியோவை எடுத்திருக்கலாம். அந்த பெண் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வீடியோ சம்பந்தமாக பங்கர்மாவ் கோட்வாலி காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்ற காவலர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in