சிறுமியை கர்ப்பமாக்கிய பின் காவலர் செய்த காரியம்: வெளி வந்த திடுக்கிடும் தகவல்கள்

சிறுமியை கர்ப்பமாக்கிய பின் காவலர் செய்த காரியம்: வெளி வந்த திடுக்கிடும் தகவல்கள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில் லால்குடி அருகே ஒரு கிராமத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அன்பில் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரது பெரியம்மா சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அந்த சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதைக்கேட்டு அதிர்ந்து போன அவரது பெரியம்மா அதற்கு யார் காரணம் என கேட்டு சிறுமியை அடித்துள்ளார். ஆனாலும் சிறுமி சரியான பதில் சொல்லாத நிலையில் சிறுமியை திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு 18 வயது என பொய்யாக கூறி கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் சிறுமியின் வயது குறித்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் மாலதி மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வயதை அதிகமாக கூறி கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

அதன்பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, அங்கு தன்னுடன் பணிபுரிந்த ஒரு வாலிபரை காதலித்ததாகவும், அவர் மூலமாக கர்ப்பம் அடைந்ததாகவும் சிறுமி கூறினார். சிறுமி கூறிய தகவலின் பேரில் போலீஸார் வாலிபரை தேடிவந்தனர்.

இந்தநிலையில், அந்த சிறுமி குறித்து சில ரகசிய தகவல்களை போலீஸாரிடம் சிலர் அளித்தனர். இதனையடுத்து சிறுமியிடம் மீண்டும் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பிரகாஷ் என்பவர், தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், தனது கர்ப்பத்துக்கு அவர்தான் காரணம் என்றும், இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால் தான் வேறு ஒருவரது பெயரை கூறியதாகவும் சிறுமி போலீஸில் தெரிவித்தார்.

இந்த தகவல் அறிந்ததும் காவலர் பிரகாஷ் தலைமறைவானார். அவரைத் தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவர் லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். அதனையடுத்து போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in