கடலூரில் காவல்துறை வாகனத்திற்கு தீவைப்பு: அதிகாலையில் பயங்கரம்

கடலூரில் காவல்துறை வாகனத்திற்கு தீவைப்பு: அதிகாலையில் பயங்கரம்
கடலூரில் காவல்துறை வாகனத்திற்கு தீவைப்பு: அதிகாலையில் பயங்கரம் கடலூரில் காவல்துறை வாகனத்திற்கு தீவைப்பு: அதிகாலையில் பயங்கரம்

கடலூரில் இன்று காவல்துறை வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதற்கு காரணமான மர்மநபர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணியைத் தொடங்கி உள்ளது. இதற்காக கீழ்வளையமாதேவி, வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகின்றது. இதற்காக கடலூரில் நேற்று முழுக் கடையடைப்பு போராட்டத்தையும் பாமக முன்னெடுத்தது. இந்த போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்தப் பணிக்காக காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருந்த காவலர்கள் நெய்வேலி வடக்குத்து பகுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில், இவர்களின் அதிவிரைவுப்படை வாகனத்துக்கு மர்மநபர்கள் தீ வைத்து இருந்தனர். போலீஸார் கொடுத்த தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அந்த வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in