சென்னை சப்-இன்ஸ்பெக்டர் குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: நீதிபதியின் பாதுகாப்பிற்கு சென்றபோது நடந்த சோகம்!

சென்னை சப்-இன்ஸ்பெக்டர் குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: நீதிபதியின் பாதுகாப்பிற்கு சென்றபோது நடந்த சோகம்!

குற்றாலத்தில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் பார்த்திபன்(54). இவர் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குற்றாலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் என்பவர் குற்றாலம் வந்திருந்தார். அவருடன் காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனும் வந்திருந்தார். இருவரும் குற்றாலத்திலிருந்து, பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.

அந்த விடுதியில் அதிகாலை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் அந்த அறைக்குச் சென்றனர். அறைக்கு உள்பக்கமாக தாழிடப்பட்டதால் அறைக் கதவை உடைத்து ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வயிற்றில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து விடுதி ஊழியர்கள் குற்றாலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் தாமஸ் தலைமையிலான போலீஸார் பார்த்திபன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்காசி எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்ப பிரச்சினை, பணிச்சுமை அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in