நெருங்கும் தீபாவளி: திக்குமுக்காடும் தி.நகர் - சென்னை காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

நெருங்கும் தீபாவளி: திக்குமுக்காடும் தி.நகர் - சென்னை காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை, தி.நகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இந்நிலையில் புத்தாடைகளையும், பட்டாசுகளையும் வாங்க மக்கள் கடைத்தெருவுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் தமிழகம் முழுவதும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை தி.நகர் பற்றிக் கேட்க வேண்டாம். கூட்ட நெரிசலால் அல்லோலகல்லோலப்படுகிறது. இதையடுத்து தி.நகரின் முக்கிய இடங்களில் காவல்துறையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “பாண்டி பஜார்,  தி நகர், மாம்பலம் ரயில் நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொது மக்களுக்குப் பயன்பெறும் வகையில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கார் மற்றும் ஆட்டோக்களுக்கென தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, அப்பகுதிகளைத் தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளோம். மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 300 சிசிடிவி கேமராக்கள், உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் குறையும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in