காவலர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

ரவுடி சூர்யா
ரவுடி சூர்யாகாவலர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

வாகன தணிக்கையில் போது உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கி விட்டு தப்பி ஓடிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்துள்ளார்.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் சங்கர் நேற்று முன்தினம் அயனாவரம் கேஎச் சாலையில் பெண் காவலர் மீனா, தனலட்சுமி, வெஸ்லின் ஆண்ட்ரியா உள்ளிட்ட காவலர்களுடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஐசிஎப்பில் இருந்து கேஎச் சாலை வழியாக பைல்சர் பைக்கில் வந்த 3 பேரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது பைக்கில் வந்த ஒருவர் இரும்பு ராடால் உதவி ஆய்வாளர் சங்கரை தலையில் அடித்து விட்டு தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய கும்பல் கௌதம், அஜித், ரவுடி பெண்டு சூர்யா என்பது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் காவலர் அமானுதீன், சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் தேடுதல் வேட்டை நடத்தி நேற்று காலை கௌதம், அஜித் ஆகிய இருவரை கைது செய்து நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நியூ ஆவடி சாலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும் போது சூர்யா தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது போலீஸார் வாகனத்தை நிறுத்தியபோது சூர்யா வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடினார். உடனே காவலர் அமானுதீன், சரவணன், திருநாவுக்கரசு ஆகிய 3 பேரும் ரவுடி சூர்யாவை பிடிக்க விரட்டிச் சென்றனர். உடனே சூர்யா அங்கிருந்த கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸாரை தாக்கி விட்டு்தப்பி ஓட முயன்றார். இதில் காவலர் அமானுதீன், சரவணன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனே உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி சூர்யாவை முழங்காலில் சுட்டு பிடித்துள்ளார். பின்னர் போலீஸார் சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் ரவுடி தாக்கியதில் காயமடைந்த இரு காவலர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் புளியந்தோப்பை சேர்ந்த சூர்யா மீது புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் பறிப்பு, வழிப்பறி, உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி் வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in