கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: திருவாரூரில் நான்கு இடங்களில் அதிரடி சோதனை

ரிஸ்வான் வீட்டில் நடைபெற்ற சோதனை
ரிஸ்வான் வீட்டில் நடைபெற்ற சோதனை

தமிழ்நாட்டை அதிரவைத்த கோவை கார்  சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் நிலையில், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டையில் நான்கு பேரின் வீடுகளில் போலீஸார்  அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கார் சிலிண்டர் குண்டு  வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையொட்டி வழக்கு தமிழக போலீஸாரிடம் இருந்து  என்ஐஏக்கு மாற்றப்பட்டு துரித கதியில்  விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில்,என்ஐஏ அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இதில் தொடர்புடையதாக கருதப்படும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த நான்கு பேரின்  வீடுகளில் சோதனை நடைபெற்றது.

முத்துப்பேட்டை பேட்டைரோடு பகுதியில் உள்ள அசாருதீன், சார்ஜீத், இன்டியாஸ் ஆகிய மூன்று பேர் வீடுகள் மற்றும்  ஜமாலியர் தெருவில் உள்ள ரிஸ்வான் என்பவரின்  வீடு ஆகிய  நான்கு இடங்களில் இன்று அதிகாலை முதல்  போலீஸார்  சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார்  உத்தரவின் பேரில், முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட  போலீஸார் குவிக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இதில் செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ்கள், சிடி டிரைவ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in