`கை தெரியாமல் பட்டுவிட்டது, அமைதியா உட்காரு'- ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் மிரட்டல்

`கை தெரியாமல் பட்டுவிட்டது, அமைதியா உட்காரு'- ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் மிரட்டல்

பேருந்தில் மனைவியிடம்  சில்மிஷம் செய்தவரைத் தட்டிக்கேட்ட கணவரை அடிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து ஆவடிக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்றில், இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்தார். அவரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், அந்த பெண்ணிடம்  சில்மிஷம் செய்ததாகத் தெரிகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்,  தனது கணவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர், அந்த நபரைத் தட்டிக் கேட்டுள்ளார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நடத்துநரும் அவர்களைச் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது சில்மிஷம் செய்ததாகக் கூறப்படும் நபர், “தூக்கக் கலக்கத்தில் கை தெரியாமல் பட்டுவிட்டது. அமைதியா உட்காரு.  நீங்க எங்க போனாலும் எனக்குப் பயம் கிடையாது. நான் ஆவடியில் காவல்துறை அதிகாரியாக இருக்கிறேன்“ என மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்து தகராறு செய்ததால், தன்னை காவல்துறை அதிகாரி என்று கூறிய நபர் அவரை அடிக்க முயன்றார். இதனால் பேருந்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி இருக்கையில் உட்கார வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in