விருதுநகரில் அடுத்த அதிர்ச்சி... வீடு திரும்பிய மாணவி எடுத்த விபரீத முடிவு: தமிழகத்தில் தொடரும் சோகம்

விருதுநகரில் அடுத்த அதிர்ச்சி... வீடு திரும்பிய மாணவி எடுத்த விபரீத முடிவு: தமிழகத்தில் தொடரும் சோகம்

பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்-கடல் மீனா தம்பதியினர். மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணம் ஆன மூத்த மகள் அதே பகுதியில் வசித்து வருகிறார். 17 வயதான இளைய மகள் யோகலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற யோகலட்சுமி, மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சற்று நேரம் கழித்து அவருடைய பாட்டி சுப்புத்தாய் வீடு திரும்பி உள்ளார். அப்போது, யோகலட்சுமி வீட்டில் தூக்கில் தொங்கிய படி கிடந்துள்ளார். இதனைக் கண்டு சுப்புத்தாய், அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். மேலும், மாணவியின் உடலை கீழே இறக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் நான்காவது பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவமாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in