கடத்தல் மையமாக மாறி வரும் வேதாளை; இனி மக்கள் அச்சம் வேண்டும்: பாதுகாக்க வந்துவிட்டது போலீஸ்

கடத்தல் மையமாக மாறி வரும் வேதாளை; இனி மக்கள் அச்சம் வேண்டும்: பாதுகாக்க வந்துவிட்டது போலீஸ்

சமீப காலமாக வேதாளை கடற்பகுதி கடத்தல் மையமாக மாறிவருதால், மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒரு விதமான அச்சத்தை போக்க காவல்துறையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இலங்கைக்கு மிக அருகே உள்ள தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் தங்கம், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை உள்ளிட்ட போதை பொருட்கள் சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்த சட்ட விரோத நடவடிக்கையை தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் முதல் 2 வாரம் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை, மரைக்காயர் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற போதை பொருட்கள், கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், வாசனை திரவியங்களுடன் கூடிய நக பாலீஷ், சமையல் மஞ்சள், மாசாலா பொருட்கள், கடல் அட்டைகள் 4 ஆயிரம் டன் அளவில் பிடிபட்டன. இதனால் இப்பகுதி மக்கள் கடத்தல்காரர்களில் நடமாட்டத்தால் அச்சமடைந்தனர்.

இந்நிலையில், கலவரங்களை ஒடுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் மத்திய ரிசர்வ் அதிவிரைவு படையினர் வேதாளை கடற்கரை பகுதியில் இன்று மாலை கொடி அணி வகுப்பு நடத்தினர். துணை கமாண்டன்ட் பிஜூ ராம் தலைமையில் 40 ரிசர்வ் படை வீரர்கள், ராமேஸ்வரம் டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில் உள்ளூர் போலீஸார் இந்த அணிவகுப்பில் ஈடுபட்டனர். டிஎஸ்பி தனஞ்செயன் கூறுகையில், சமூக கலவரங்களை ஒடுக்குதல், அமைதி திரும்ப பாதுகாப்பு பணியில் அதிவிரைவு படையினர் ஈடுபடுத்தப்படுவர். சமீப காலமாக வேதாளை கடற்பகுதி கடத்தல் மையமாக மாறிவருதால், மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒரு விதமான அச்சத்தை போக்க இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து வாரம் ஒரு நாள் கூட்டு ரோந்து மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in