தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி: வயல்வெளியில் சடலம் மீட்பு!

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி: வயல்வெளியில் சடலம் மீட்பு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிராமத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது சடலம் நெல் வயலில் இருந்து மீட்கப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் பகுதியில் இருக்கும் சம்பூரா கிராமத்தின் வயல் வெளியில் இன்று காலை போலீஸ் சார்பு ஆய்வாளர் ஃபரூக் அஹமது மிர்ரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 23 ஐஆர்பி பட்டாலியனில் பணியாற்றும் அவரின் உடலில் துப்பாக்கிச்சூடு காயங்கள் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையின் படி, நேற்று மாலை தனது நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள பாதுகாப்பு படையினர், அப்பகுதியில் சோதனையை அதிகரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in