மனைவி, உறவினரைக் சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி! தானும் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

மனைவி, உறவினரைக் சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி! தானும் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவி மற்றும் உறவினரை  துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவல் அதிகாரி தன்னையும்  சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் உதவி காவல் ஆணையராக இருந்தவர் பரத் கெய்க்வாட் (57).  அமராவதி நகரில் பனேர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது வீட்டில், உறவினர் சித்தார்த் கெய்க்வாட் என்பவர்  வழக்கறிஞர் பயிற்சி பெறுவதற்காக வந்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15ம் தேதியிலிருந்து பரத் கெய்க்வாட்  தொடர் விடுப்பில் இருந்து வந்துள்ளார். நேற்று கணவன் மற்றும் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த பரத் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து வந்து மனைவியின் தலையில் வைத்து சுட்டுள்ளார்.  இதில் அதே இடத்தில் பரிதாபமாக பரத்தின் மனைவி கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். 

துப்பாக்கி சத்தம் கேட்டதும் பக்கத்து அறையில் இருந்து அவரது உறவினரான சித்தார்த் கெய்க்வாட்  ஓடி வந்து தடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது ஆத்திரத்தில் இருந்த பரத் கெய்க்வாட், தனது உறவினர் சித்தார்த்தின் நெஞ்சுப் பகுதியை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். இதில் சித்தார்த்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரும் உயிரிழந்ததை கண்ட பரத் கெய்க்வாட்  அதிர்ச்சி அடைந்து தனது துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அமராவதி நகர் போலீஸார் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விவகாரம் அமராவதி  நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in