'என்னை லவ் பண்றியா?'; பெண் தாதாவுடன் போலீஸ்காரர் ரொமான்ஸ்: அலற வைக்கும் ஆடியோ

எஸ்தர் மற்றும் மாதவன்
எஸ்தர் மற்றும் மாதவன்'என்னை லவ் பண்றியா?'; கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதாவுடன் போலீஸ்காரர் ரொமான்ஸ்: அலற வைக்கும் ஆடியோ

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதா ஒருவருடன், உளவுத்துறையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (30). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராகவும்,  திமுக கட்சியின் வார்டு செயலாளருமாகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக  சில மாதங்களுக்கு முன்பு இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  

இந்த வழக்கில் , குன்றத்தூர் முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதியும், பெண் தாதாவுமான எஸ்தர் (எ) யோகேஸ்வரி என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார்.

இவருடன் தாம்பரம் ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட சோமங்கலம் காவல் நிலையத்தின் உளவுப்பிரிவு போலீஸ்காரர் மாதவன் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொள்ளும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கொலை,கொலை முயற்சி, வழிப்பறி என ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சச்சினை யாரும் பிடிக்க முடியாது எனவும், அவன் போலீஸின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டவன் எனவும் மாதவன் கொலை குற்றவாளிக்கு ஆதரவாக பேசுகிறார். அதற்கு, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்? நீ என்னை எவ்வளவு லவ் பண்ற? என்று எஸ்தர்(எ) யோகேஸ்வரி மாதவனிடம் கேட்பதும் என்பதாக ஆடியோ நீளுகிறது.

குற்றங்களை முன்கூட்டியே அறிந்து காவல்துறை கமிஷனருக்கு தகவல் அளிக்கக்கூடிய முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு உளவுத்துறை போலீஸ்காரரே,  குற்றவாளி திறமையானவன் அவனை போலீஸ் பிடிக்க முடியாது எனக் கூறுவதும், பல்வேறு கொலைக் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய  பெண் தாதாவிடம் கொஞ்சி குலாவுவதும், காவல் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை கெடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரவுடிகளுக்கு காவல்துறையினர் சாதகமாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தையும், அச்சத்தை இந்த ஆடியோ ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in