பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் வாகனம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் வாகனம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

சென்னை மெரினாவில் காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் 1300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிப்புரியும் காவலர்களுக்கு வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது. சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் நெல்சன். இவருக்கு மெரினாவில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.

நெல்சன் தனது இரு சக்கர வாகனத்தை உழைப்பாளர் சிலை அருகில் நிறுத்திவிட்டு பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது பணி முடிவடைந்த நிலையில், தான் நிறுத்திவிட்டு சென்ற இடத்தில் தனது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் நெல்சன் புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் இருசக்கர வாகனத்திற்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து சக காவலர்கள் நொந்துக் கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in