விடுமுறை நாளில் மதுவிற்பனை செய்யும் உதவி ஆய்வாளர்: சிக்க வைத்த வாட்ஸ்அப் வீடியோ!

விடுமுறை நாளில் மதுவிற்பனை செய்யும் உதவி ஆய்வாளர்: சிக்க வைத்த வாட்ஸ்அப் வீடியோ!

விடுமுறை நாளை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் காவலரின் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காவல் நிலையத்தில் சிறப்புத் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் குணசேகரன்(65). இவர் திருத்தணி புறவழிச்சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர், அவ்வப்போது மதுவை வாங்கி விற்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக முன்னாளே மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவிலிருந்தே தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

திருத்தணி புறவழிச்சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருசக்கர வாகனத்தில் வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். அவர் மது விற்பனை செய்வதை வீடியோவாக எடுத்து சிலர் வாட்ஸ்அப்பில் பரவவிட்டனர். இதையடுத்து திருத்தணி போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையைச் சேர்ந்தவரே மது விற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப்பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in