ரூ.22 கோடி மோசடி..நியோ மேக்ஸ் தொடர்புடைய 30 இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை!

நியோ மேக்ஸ் மோசடி சோதனை
நியோ மேக்ஸ் மோசடி சோதனை

பல நூறு கோடி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள நியோ மேக்ஸ் தொடர்புடைய 30 இடங்களில் 2 வது முறையாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை டெபாசிட் செய்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பான புகாரில் கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் முறையாக மதுரை காளவாசல் அருகே உள்ள நியோ மேக்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.  இதனை தொடர்ந்து சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து,சகாய ராஜா உள்ளிட்ட  நியோ மேக்ஸ் கிளை நிறுவனத்தை சேர்ந்த 4  இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர்.   

இந்நிலையில் இன்று மதுரை, விருதுநகர்  நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.   

நேற்று வரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட  100 புகார் மனுக்களில் 22 கோடி ரூபாய் வரை பணம் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in