கதவை உடைத்து அறைக்குள் புகுந்த போலீஸ்: அழுகிய நிலையில் பிஎச்டி மாணவர் உடல் மீட்பு

கதவை உடைத்து அறைக்குள் புகுந்த போலீஸ்: அழுகிய நிலையில் பிஎச்டி மாணவர் உடல் மீட்பு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு படித்து வந்த மாணவர் தான் தங்கி இருந்த அறையில் மர்மமான முறையில் மரணமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராம். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக காரைக்குடி நூறடி சாலையில் தனி அறை எடுத்து தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில், இன்று சுப்புராம் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, நேரில் வந்த காவல்துறையினர் அறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது சுப்புராம் அமர்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அறை முழுவதும் மது பாட்டில்கள் இருந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்த அவரது உடலைக் கைப்பற்றிய காரைக்குடி வடக்கு காவல்துறையினர் உடலை உடற்கூறாய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்புராம் அதிக மது அருந்தி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in