
கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற ஆட்டோ வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் ஊட்டியில் ஒரு நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகாவின் மங்களூரில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. முதலில் இது தற்செயலான தீ விபத்து என்று கருதப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் 'இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல்' என்று கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தெரிவித்தார்.
அதனையடுத்து இதுகுறித்து கர்நாடக போலீஸாருடன் மத்திய விசாரணை அமைப்புகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஊட்டியை அடுத்த குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் தான் வெடி விபத்திற்குக் காரணமாக இருந்த நபருக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்தாக தெரியவந்துள்ள நிலையில் அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.