விதி மீறிய போலீஸ் ரோந்து வாகனம்; சிக்க வைத்த நெட்டிசன்கள்: அடுத்து நடந்தது என்ன?

விதி மீறிய போலீஸ் ரோந்து வாகனம்; சிக்க வைத்த நெட்டிசன்கள்: அடுத்து நடந்தது என்ன?

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட போலீஸ் வாகனம் குறித்து ட்விட்டரில் புகார் அளித்த நிலையில் அந்த வாகனத்திற்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளதால் நெட்டிசன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு சொந்தமான ரோந்து வாகனம் ஒன்று ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள சிக்னலில் வலது புறம் திரும்பக் கூடாது என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனை பொருட்படுத்தாமல் ரோந்து வாகன ஓட்டுநர் வலது புறமாக திரும்பியுள்ளார்.

இதனை சென்னை சேர்ந்த நபர் ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு சென்னை போக்குவரத்து காவல்துறை இந்த விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த காவல்துறை ரோந்து வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அபராதத்திற்கான ரசீதையும் போக்குவரத்து காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறையின் இந்த கடமை மிகுந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மீறும் நபர்கள் குறித்த விவரங்களை ஆதாரத்துடன் பதிவிட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in