விசாரணை வளையத்தில் டாக்டர் சரவணனின் உதவியாளர்: நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் நடவடிக்கை

விசாரணை வளையத்தில் டாக்டர் சரவணனின் உதவியாளர்: நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் நடவடிக்கை

தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் முன்னாள் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் உதவியாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் கடந்த 13-ம் தேதி ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவர், மகளிர் அணி தலைவி என 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பாஜகவின் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் உதவியாளர் சுந்தரிடம் அவனியாபுரம் காவல்துறையினர், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர் சரவணன் இந்த விவகாரத்தில் அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டதுடன் திமுகவிற்கு ஆதரவாக பேசியதால் அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உதவியாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in