முதலில் கை, கால்களை அமுக்கச் சொல்வார்... பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் குறித்து பள்ளி சிறுமி பகீர் புகார்!

முதலில் கை, கால்களை அமுக்கச் சொல்வார்... பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் குறித்து பள்ளி சிறுமி பகீர் புகார்!

ஐந்தாம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியர் ஒருவரின் தகாத செயலால் மனமுடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம், சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர், கோடை விடுமுறை முடிந்த நிலையில் கடந்த 20-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் 22-ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி நான் இனி பள்ளிக்குச் செல்லமாட்டேன் எனப் பெற்றோரிடம் அழுதவாறு கூறியுள்ளார். இது குறித்துப் பெற்றோர்கள். மகளிடம் விசாரித்தபோது அகஸ்டின் தங்கையா என்கிற பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை கை, கால்களை அமுக்கச் சொல்லி அவர்களிடமும் ஆசிரியர் அத்துமீறி நடந்து வருகிறார் எனவும், தன்னைப் பார்க்கப் பள்ளிக்கு வந்த உறவுக்கார சிறுமியிடமும் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லக்கூடாது என அவர் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமி கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சென்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் விசாரித்துள்ளனர்.

இதற்கு அவர் மழுப்பலாகப் பதில் கூறியதால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் ஆசிரியரை சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையா அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மேலும் பிரச்சினையைப் பெரிதாகாமல் இருக்க அகஸ்டின் தங்கையாவின் உறவினர்கள் சிறுமியின் பெற்றோரிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை ஏற்றுக் கொள்ளாத சிறுமியின் பெற்றோர், அந்த ஆசிரியர் மீது கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் கெங்கவல்லி போலீஸார் ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியரின் தகாத செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in