சாதி ரீதியாக பேசிய பச்சையப்பன் கல்லூரி துறைத்தலைவர்: வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய போலீஸில் விசிக பரபரப்பு புகார்

சாதி ரீதியாக பேசிய பச்சையப்பன் கல்லூரி துறைத்தலைவர்: வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய போலீஸில் விசிக பரபரப்பு புகார்

கல்லூரி மாணவர்களிடம் செல்போனில் சாதிரீதியாக பேசிய பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் அக்கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் அனுராதா, பட்டியலின மாணவர்களைச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் பேராசிரியர் அனுராதா மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் புகார் அளித்துள்ளார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஆசிரியர்கள் மாணவர்களிடையே சாதி ரீதியாக பேசி வருவது தொடர்கதையாகி வருகிறது. உடனடியாக காவல்துறை அதிகாரிகள் இதனைத் தடுக்க வேண்டும் . இதுபோன்று சாதி ரீதியாக பேசிய பேராசிரியர் அனுராதா மீது எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மற்ற பேராசிரியர்கள் யாரும் இதுபோன்று பேசாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸார் அல்லது கல்லூரி தரப்பில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரிடம் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in