இயற்கை உபாதை கழிக்க விட மறுத்த ஆசிரியர்: 3 மணி நேரம் தவித்த மாணவன்: சாத்தான்குளத்தில் துயரம்

இயற்கை உபாதை கழிக்க விட மறுத்த ஆசிரியர்: 3 மணி நேரம் தவித்த மாணவன்: சாத்தான்குளத்தில் துயரம்

இயற்கை உபாதை கழிக்க மாணவனை அனுமதிக்காத ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சாத்தான்குளத்தில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, மோதலுக்கு காரணமான மாணவனை ஆசிரியர் கண்டித்து இருக்கிறார். இதனிடையே, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று அந்த மாணவன் இடைவேளையின்போது ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் ஆசிரியர் மூன்று மணி நேரம் அந்த மாணவனை இயற்கை உபாதை கழிக்க அனுப்பவில்லை.

இந்த நிலையில் மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்துள்ளார் மாணவன். அப்போது சிறுநீர் கழித்தபோது பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in