நடிக்க அழைத்த உதவி இயக்குநருக்கு கன்னத்தில் அறை: நடிகர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

நடிகர் நவீன்குமார்.
நடிகர் நவீன்குமார்.

படப்பிடிப்பிற்கு வராததால் காட்சியில் நடிக்க அழைத்த உதவி இயக்குநரை கன்னத்தில் அறைந்த நடிகர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையின் பிரபல நடிகர் நவீன்குமார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே' நாடகத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த நாடகம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்', தனுஷ் நடித்த 'பட்டாஸ்', சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' உள்ளிட்ட படங்களில் நவீன்குமார் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது கலர்ஸ் தெலைக்காட்சியில் 'கண்ட நாள் முதல்' நாடகத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது மதிய உணவு இடைவேளைக்குப் நவீன் குமார் படப்பிடிப்பிற்கு வரவில்லை.

இதனால் இந்த நாடகத்தின் உதவி இயக்குநரான குலேசகரன், நவீனின் அறைக்குச் சென்று அவரை நடிக்க அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உதவி இயக்குநர் குலசேகரனை நடிர் நவீன் குமார் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்ணுக்குக் கீழ் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. இதுகுறித்து சின்னத்திரை இயக்குநர் சங்கம் மற்றும் மதுரவாயல் காவல் நிலையத்தில் உதவி இயக்குநர் குலசேகரன் புகார் அளித்தார். இதனால் கண்ட நாள் முதல் நாடக சூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த சீரியலில் நவீன்குமார் நடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in