கஞ்சா கும்பல் குறித்து போலீஸில் புகார்: தொலைக்காட்சி நிருபரின் பைக்கை எரித்த மர்ம நபர்கள்!

கஞ்சா கும்பல் குறித்து போலீஸில் புகார்: தொலைக்காட்சி நிருபரின் பைக்கை எரித்த மர்ம நபர்கள்!

புழல் அருகே கஞ்சா போதை ஆசாமிகள் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த தனியார் தொலைக்காட்சி நிருபரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.

சென்னை புழல் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜன்

அப்பகுதியில் உள்ள கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம் குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நேற்று இரவு ராஜன் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி உள்ளனர். வாகனம் பற்றி எரிவதை கண்ட அவரது தாய் மற்றும் ராஜன் ஒடிவந்து தீயை அணைத்தனர். இதில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமடைந்தது. ராஜன் அளித்த புகாரின் பேரில் புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த செய்தியாளரின் இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவ்வாறு கஞ்சா போதையில் அட்டகாசம் செய்யும் நபர்களை காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in