நண்பர்கள் கொடுத்த ஐடியா; சென்னை, விழுப்புரத்தை குறிவைத்து பைக் திருட்டு; சிக்கிய வாலிபர்கள்

நண்பர்கள் கொடுத்த ஐடியா; சென்னை, விழுப்புரத்தை குறிவைத்து பைக் திருட்டு; சிக்கிய வாலிபர்கள்

சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நண்பர்களுடன் இணைந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சென்னை தி.நகர் பகுதியில் வசித்து வரும் மாதவன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் அதே பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கிஷோர் ஆகியோர் இருசக்கர வாகனங்களை திருடி செல்வதை கண்டுபிடித்தனர். 

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ஏழு இருசக்கர வாகன பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் சென்னை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் நண்பர்களுடன் இணைந்து வாகனங்களை திருடுவது வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in