
இரவில் கார் மீது பெரிய கல்லை போட்டு வங்கி அதிகாரியை இரண்டு காவலர்கள் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியை சேர்ந்தவர் வடிவேலன். வங்கியில் பணியாற்றி வரும் இவருக்கும், மேலூரை சேர்ந்த சகோதரர்களான காவலர்கள் ஜெகதீசன், தினேஷ் ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்து வந்துள்ளனது. இந்நிலையில், நேற்று இரவில் தனது காரில் வடிவேலன் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகதீசன், தினேஷ் ஆகியோர் காரை மறித்தனர். பின்னர் ஜெகதீசன் காரில் பெரிய கல்லைப்போட்டு வடிவேலனை கொல்ல முயன்றார். இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் தினேஷ் தனது இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வடிவேலன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காவலர் தினேஷை கைது செய்தனர்.
இதில் காவலர் ஜெகதீஷ் ஏற்கெனவே பணியிட நீக்கம் செய்யப்பட்டவர். காவலர் தினேஷ் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.