முதிர் வயதிலும் போலீஸுக்கு சவால் விடும் 72 வயது கஞ்சா வியாபாரி: ரெய்டில் பேத்தியுடன் சிக்கிய மூதாட்டி

கைது
கைது

கஞ்சாவிற்கு எதிராக தமிழகக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இப்படியான சூழலில் குற்றாலத்தில் 72 வயதான பாட்டி, தன் பேத்தியோடு சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கைதாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி ஆயிரப்பேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பார்வதி(72). குற்றாலம் காவல் நிலையக் குற்றப் பதிவேட்டிலும் பார்வதியின் பெயர் இருக்கிறது. வயதான தோற்றத்தில் இருந்தாலும் பார்வதியின் செயல்கள் போலீஸாருக்கே சவால் விடுவதாக இருக்கும். இதுவரை 15க்கும் அதிகமான குற்றவழக்குகள் பார்வதி மீது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பார்வதி கஞ்சா விற்பனையிலும் இறங்கினார். குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்துவந்தார் பார்வதி. இதுபற்றித் தகவல் தெரிந்ததும் குற்றாலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான போலீஸார், பார்வதியிம் வீட்டில் போய் தடாலடி சோதனை நடத்தினர். அதில் பார்வதி, தன் பேத்தி ராமலெட்சுமி வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து சிறிது, சிறிதாக வெளியில் கொண்டுபோய் விற்றுவந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பாட்டி பார்வதியையும், பேத்தி ராமலெட்சுமியையும் கைதுசெய்த போலீஸார் அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்றுக் கையில் வைத்திருந்த 26,800 ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதேபோல் கஞ்சா விற்பனைக்கு இவர்கள் பயன்படுத்திய இரு செல்போன்களும் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in