
ஜெபம் செய்வதாக கூறி சிறுமியை பாலியல் சீண்டல் செய்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மதுரை கூடல் நகர் அடுத்த ரயிலார் நகர் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் லாரன்ஸ், இவர் மதுரை, பொன்மேனி கிழக்குத்தெருவில் தனது சபையை சேர்ந்த ஒரு வீட்டுக்கு ஜெபம் செய்வதாக கூறி அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த 16 வயது சிறுமி குளிக்கும்போது போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அதை வைத்து மிரட்டி சிறுமியிடம் பலமுறை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் புகாரின்பேரில் லாரன்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள மதுரை கூடல் நகர் போலீஸார், லாரன்ஸைத் தேடி வருகின்றனர்.