விடுதியில் தங்கி படித்த 2 மாணவிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் கொடுமை: மடாதிபதி மீது பாய்ந்தது வழக்கு

விடுதியில் தங்கி படித்த 2 மாணவிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் கொடுமை: மடாதிபதி மீது பாய்ந்தது வழக்கு

பத்தாம் வகுப்பு மாணவிகளை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மடாதிபதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் பிரபலமான முருகமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள், மைசூரில் உள்ள சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு நட்ந்த விஷயத்தைக் கூறியுள்ளனர். இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவருக்கு உடந்தையாக இருந்த சித்ர துர்காவில் இருக்கும் அக்கமா தேவி வஸ்தி நிலையத்தில் வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரைய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளையும் போலீஸார் மீட்டு. குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த பாலியல் வழக்கை மைசூர் நஜர்பாத் போலீஸார், சித்ரதுர்கா போலீஸிக்கு மாற்றியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மடாதிபதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in