கடலூரில் பாமக சார்பில் நாளை முழு அடைப்பு: அனைத்தும் இயங்கும் என அரசு அறிவிப்பு

நெய்வேலி என்எல்சி
நெய்வேலி என்எல்சி கடலூரில் பாமக சார்பில் நாளை முழு அடைப்பு: அனைத்தும் இயங்கும் என அரசு அறிவிப்பு

நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நாளை  கடலூர் மாவட்டத்தில்  முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில்  அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெய்வேலி என்எஸ்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியில் மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வளையமாதேவி பகுதியில் நேற்று முதல் சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு அனைத்து வணிகர்களும் ஆதரவு தர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

`என்.எல்.சி மேற்கொண்ட அத்துமீறல்களும், அதற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளும் தேவையற்றவை. என்.எல்.சியும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அச்சுறுத்துவதற்காகவே என்.எல்.சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்றைய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அவற்றை கடலூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

`உழவர்களையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்.எல்.சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டுவதற்காகத்தான் நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இது என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொதுமக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும். 

நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்'  என்று அன்புமணி ராமதாஸ்  கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் ஆகியோர் நாளை மாவட்டத்தில்  அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்,  கடைகள் திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளனர். வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் நாளை நடைபெறும் என்எல்சி போராட்டத்தில்  கடைகளை அடைக்க சொல்லி யாரும் வலியுறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in