தேசிய விருதுபெற்ற பாடகர் மாரடைப்பால் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

தேசிய விருதுபெற்ற பாடகர் மாரடைப்பால் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

தேசிய விருது பெற்ற கன்னட பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

83 வயதான பிரபல கன்னட பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா பெங்களூருவில் வியாழக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். சிவமொக்கா சுப்பண்ணா ‘காடு குதுரே’ என்ற கன்னட படத்தில் இடம்பெற்ற ‘காடு குதுரே ஓடி பந்திட்ட’ எனும் பாடலுக்காக தேசிய விருது பெற்றார். கன்னட சினிமாவின் முதல் தேசிய விருது வென்ற பாடகர் இவர் ஆவார். விருது பெற்ற கன்னட எழுத்தாளர் குவெம்பு எழுதிய ‘பாரிசு கன்னட திண்டிமாவா’ பாடலைப் பாடிய பிறகு சுப்பண்ணா கர்நாடகாவில் பிரபலமானார்.

அவரது மரணம் குறித்து அறிந்ததும் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கன்னடத்தில் கவிதைகளை இசையமைக்கும் வகையிலான 'சுகம சங்கீதா' துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட சிவமொக்கா சுப்பண்ணா, குவெம்பு மற்றும் தாரா பேந்திரே போன்ற பிரபல கவிஞர்களின் கவிதைககளை பாடல்களாக பாடியுள்ளார். மேலும் இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பாடகராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சிவமொக்கா சுப்பண்ணாவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

மறைந்த பாடகரின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in