நாளை காஷ்மீர் செல்லும் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை காஷ்மீர் செல்லும் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் நாளை (ஏப்.24) முதன்முறையாகக் காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி. ஜம்மு அருகில் உள்ள சாம்பா மாவட்டத்தின் ‘பள்ளி’ பஞ்சாயத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் கொண்டாடப்படும் நாளில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சுமார் 30,000 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிலையில், நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரலை மூலம் பிரதமர் மோடியின் உரையைக் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமரின் பயணத்தையொட்டி, காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

2019 ஆகஸ்ட் 5-ல், 370-வது சட்டகூறு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம், ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, 2019 பிப்ரவரி 3-ல் அங்கு சென்ற பிரதமர் மோடி, ஜம்மு, ஸ்ரீநகர், லடாக் என மூன்று நகரங்களுக்கும் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

2019 அக்டோபர் 27-ல் ஜம்மு அருகில் உள்ள ரஜவுரியிலும், நவம்பர் 3-ல் ஜம்மு டிவிஷனில் உள்ள நவ்ஷெராவிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் எல்லைக்கு பிரதமர் சென்றிருந்தாலும் காஷ்மீருக்குள் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

இந்த முறை, 70,000 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் துறை முதலீடுகளை அவர் தொடங்கிவைக்கிறார். இரண்டு மின்சக்தித் திட்டங்கள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in