
சிறுநீரகப் பாதிப்பால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் அனுதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். இதில், மூத்த சகோதரர்கள் சோம்பாய், அம்ருத்பாய், இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி, சகோதரி வசந்தி பென், கடைசி சகோதரர் பங்கஜ் பாய். இதில் பிரகலாத், குஜராத் மாநில நியாய விலைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை வந்த பிரகலாத்துக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகப் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.