‘உங்களின் வீரம் எண்ணற்றோருக்கு ஊக்கமளிக்கிறது’ - பூலித்தேவர் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்வீட்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவரின் வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

பூலித்தேவரின் பிறந்தநாளுக்காக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நெற்கட்டான் செவலை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த பூலித்தேவர் 1715 ம் ஆண்டில் பிறந்தவர். 1750 முதல் 1766 வரை நடந்த பல போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி வெற்றி கண்டவர் பூலித்தேவர். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரிக்கு அருகில் உள்ள நெல்கட்டும்செவல் என்னும் இடத்தில் பூலித்தேவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in