இன்று நிதி ஆயோக் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்: தலைமை வகிக்கும் பிரதமர் மோடி!

என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன?
இன்று நிதி ஆயோக் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்: தலைமை வகிக்கும் பிரதமர் மோடி!

நிதி ஆயோக் ஆட்சி மன்றக் குழுவின் ஏழாவது கூட்டம், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார்.

புறக்கணித்த கேசிஆர்

நிதி ஆயோக் ஆட்சி மன்றக் குழுவில் பிரதமர் மோடி, அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர், அதன் முழு நேர உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்.

நோக்கம் என்ன?

பயிர் பல்வகைப்படுத்துதல், எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு அடைதல், பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

மத்திய அரசுடன் மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்த இந்தக் கூட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஜூலைக்குப் பின்னர் அனைவரும் நேரடியாகக் கலந்துகொள்ளும் ஆட்சிமன்றக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in